Breaking News

டிஎன்பிஎஸ்சி தேர்வில் 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத் தரகர்கள் கைது 2 தாசில்தார்கள் இடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சிதேர்வில் 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத் தரகர்கள் கைது 2 தாசில்தார்கள் இடம் விசாரணை...
       

                           டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் 9398 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடத்தியது. தேர்வு முடிவு நவம்பர் 12ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியானது.

இந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்களில் 39 பேர் இடம்பெற்றிருந்தனர்.அவர்களில் பலர் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் என்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் புகார் கூறினர் அதன் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி  நிர்வாகம் விசாரணையை தொடங்கியது.சம்பந்தப்பட்டவர்களை கடந்த 11ம் தேதி நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...