புதிய 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? New 2000 banknotes go missing?
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா?ஆர்பிஐ விளக்கம்...
ATM களில் 2000 ரூபாய் நோட்டுக்கள் வழங்கப்படுவதை வங்கிகள் நிறுத்தி உள்ளநிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. மத்திய அரசு 2016 ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்தில் இருந்து 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
அதற்கு பதிலாக 2000 ,500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. கருப்பு பணத்தை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக பகுதி உள்ளதால் அதை தடை செய்வதாக கூறி மத்திய அரசு பின்னர் 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தது.இந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் வங்கி,எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தங்களது ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என அறிவித்தனர்.
2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லரை தட்டுப்பாடு உள்ளதால் இந்த நடவடிக்கை என விளக்கம் அளித்துள்ளனர்.இந்தநிலையில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பு வெளியாகலாம் என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் மத்திய அரசிடம் தற்போதுவரை அப்படியான எண்ணம் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அதை நிறுத்தி விட்டதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டிலேயே தெரியவந்துள்ளது.
2016 17 ஆம் ஆண்டில் 354 கோடியே 30 லட்சம் ரூபாய் 2000 நோட்டுகள் அச்சடிக்கப் பட்டதாகவும், 2017 18 ஆம் ஆண்டில் 11 கோடியே 15 லட்சம் மதிப்பு குறைந்துள்ளது கூறியுள்ளது.2018 19 ஆம் ஆண்டில் இது மேலும் குறைக்கப்பட்டு 4 கோடியே 67 லட்சத்து மட்டும் எச்சரித்துள்ளது. 2019 20 ஆம் நிதி ஆண்டில் 2000 ரூபாய் நோட்டு எதுவும் அச்சடிக்க படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்துள்ளதால் பணப் புழக்கத்தில் பிரச்சனை ஏற்படாதவாறு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றாலும் இப்போதைய சூழலில் வங்கி அதிகாரிகளும் இதுதொடர்பான குழப்பத்தில் உள்ளனர்.
அதிக மதிப்புடைய இந்த நோட்டுகளால் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் தோல்வியடைய வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்தனர். இந்த நிலையில்தான் 2000 ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.அப்படி அறிவிக்கப்பட்டால் இன்னொருமுறை அந்த சுமையை தாங்க முடியுமா என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...