மீண்டும் மெட்ராஸ் ஐ செய்ய வேண்டியது என்ன? What to do?
மீண்டும் மெட்ராஸ் ஐ செய்ய வேண்டியது என்ன?
கண் பகுதியில் உள்ள வெள்ளை நிற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் வளர்வதால் கண்கள் இளம் சிவப்பு நிறத்தில் தோன்றுவதை மெட்ராசை என்கிறோம். கோடை காலத்தில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ சென்னையில் தற்போது பரவி வருகிறது. இந்த கண் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் நாளொன்றுக்கு 10 முதல் 15 நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாக சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவமனை தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை பார்த்தாலே அது பரவும் என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. இதன் உண்மை நிலவரத்தை விளக்குகிறார் மருத்துவர்.
- முதலில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
- அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கண் அல்லது கண்களை குளிர்ந்த நீரைக் கொண்டு அடிக்கடி கழுவவேண்டும். சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லது.
- தனிப்பட்ட டவல் கைக்குட்டை தலையணை உறை படுக்கை விரிப்பு மற்றும் சோப்பு ஆகியவை பயன்படுத்த வேண்டும்.
- கான்டக்ட் லென்ஸ்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.
- பாதிப்புக்குள்ளான குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.
- நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றவர்களிடம் கை குலுக்குதல் தவிர்க்கவேண்டும்.
கண் நோய் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்புகளும் காணப்படுவது இயல்பான இருந்தாலும் நோய் மேலும் பரவாமல் இருக்கவும் மருத்துவர்கள் கூறியுள்ளவற்றை பின்பற்றினாலே போதுமானதாகும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...