Breaking News

தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல்!


                 தூக்கு தண்டனைக்கு எதிராக கருணை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு தாக்கல் செய்திருக்கிறார்.மீண்டும் அவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.குற்றவாளிகள் அனைவருமே ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு, மறுசீராய்வு மனு இதைத்தவிர திருத்தங்கள் கோரும் மனு ஆகியவை அனைத்தையும் தாக்கல் செய்து, அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டு விட்டன.

அதேபோலவே குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இது ஒவ்வொரு குற்றவாளியும் தனித்தனியாக தாக்கல் செய்த அனைவருக்கும் விவரிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் புதிய டேத் வாரண்ட் என்று தூக்கிலிடுவதற்கான உத்தரவு அளிக்கப்பட்டிருக்கும் நிலையிலே குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் உச்ச நீதிமன்றத்திலேயே ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.மரண தண்டனைக்கு எதிராக புது சீராய்வு மனு மற்றும் கருணை மனு அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேரடியாக மனுக்களை தாக்கல் செய்யாமல் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.இது தண்டனையை தொடர்ந்து தாமதப்படுத்த செய்யப்பட்டு கொண்டிருக்கும் முயற்சிகளில் இன்னொரு கட்டமாகக் கருதப்படுகிறது.நேற்றைய தினம் தான் நீதிமன்றம் ஏற்கனவே உள்ள டேத் வாரண்ட் என்று சொல்லப்படும் தூக்கிலிடுவதற்கான பணிகள் அனைத்தும் மாற்றப்பட்ட ரத்து செய்யப்பட்ட நிலையிலேயே புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில் அதை தடுக்கும் முறையில் மீண்டும் ஒருமுறை தாமதப்படுத்தும் முயற்சியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.உச்சநீதிமன்றம் இதுபோன்ற மனுக்களை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே வரும் வாரம் உச்ச நீதி மன்றத்திற்கு ஹோலி  பண்டிகைக்காக விடுமுறை.ஆகவே அதற்கு பிறகு இதுபோன்ற மனுக்கள் பரிசீலனை செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...