அடிக்கடி சளி பிடிக்குமா உங்களுக்கு ? இதை மட்டும் செய்யுங்க சளி பிரச்னை வரவே வராது...
சளி பெரிய பிரச்சினையா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் காரணம் சாதாரணமாக ஒரு வாரத்தில் பலருக்கு ஓடிவிடும் சளி சிலரை படுத்தி எடுத்துவிடும்.
நம் சுவாசக்குழாயில் சளியின் தாக்கம் அதிகரித்து விட்டால் மூச்சு விடக்கூட முடியாது.அது மிகுந்த சிரமத்தை உண்டாக்கும் அப்படியானால் என்ன செய்வது.உடனே மருத்துவரைத் தேடி ஓடி விடாதீர்கள்.நாமே இயல்பாக நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களின் மூலம் இயற்கை முறையில் சளியை விரட்ட முடியும்.அது எப்படி என்பதை கடைசி வரைக்கும் பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க...
சளி வருமுன்னர் வராமல் தடுப்பதில் தான் நம் வெற்றி இருக்கிறது.அந்த வகையில் ஒரு ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதை தினமும் குடித்தால் அதிகப்படியான சளி உற்பத்தி தடுக்கப்பட்டு விடும்.
எலுமிச்சை சாறையும் தேனையும் கலந்து அதை தினசரி மூன்று வேளை குடித்து வந்தால் சளி பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.
இதேபோல் ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் மூலிகை இலைகளை போட்டு அந்த நீரால் தினசரி நான்கு முறை ஆவிபிடித்தால் சளி விரைவில் வெளியேறிவிடும்.
ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் மஞ்சள் தூள் உப்பு கலந்து அதை தினமும் நான்கு முறை குடித்து வந்தால் சளி தொண்டையில் தேங்குவது குறையும்.
இதேபோல் ஒரு டம்ளர் தண்ணீரில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.
இது அனைத்துமே சின்னச்சின்ன வழிமுறைகள் தான்.அதனால இத செஞ்சு பாருங்க சளி உங்களை நெருங்கவே நெருங்காது.உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க... தேங்க்யூ... இந்த தகவல் பிடித்திருந்தால் ஷேர் செய்யவும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...