Breaking News

காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதால் அப்படி என்னதான் நன்மைகள்...!

                         

                          காலையில் எழுந்தவுடன் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது.நம் உடல் ஒரு நாள் முழுக்க எப்படி இயங்க போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.அந்த வகையில் வெந்நீர் குடிப்பதால் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை ஜப்பானிய மருத்துவ குழு ஒன்றின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தினமும் காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுமார் இரண்டு டம்ளர் அளவுக்கு வென்னீரில் பருகவேண்டும்.உண்மையிலேயே இவ்வளவு நன்மைகளும் கிடைக்கிறது என்றால் ஏன் நாம இதைச் செய்யக் கூடாது.அப்படி என்னதான் நன்மைகள்...!

தண்ணீர் குடித்தவுடன் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது.இது உடனடியாக வேர்வையாக உடம்பை விட்டு வெளியேறியது.இதனால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தம் எனது அடுத்து சளி, இருமல் மற்றும் தொண்டை புண் இவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எப்படி என்றால்வெந்நீர் சளியை முறித்து சுவாசப் பிரச்சினைகள் இருந்து விடுதலை தரும்.அதுமட்டுமல்லாமல் வெந்நீர் சுவாசப்பாதை சுத்தமாக வைத்துக்கொள்ளும்.முக்கியமாக குடலியக்கம் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.மலச்சிக்கலும் நீர்ச்சத்துக் குறைவும்  உடல் இயக்கத்திற்கு முக்கிய எதிரிகள்.உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன.மலச்சிக்கல் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்சனைகள் கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

 மிதமான சுடுநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடலியக்கம் அதிகரிக்கும்.அடுத்ததாக டீன் ஏஜ் பருவத்தில் பெரும்பாலான பெண்களையும் ஆண்களையும் பருக்கள் பாடாய்ப்படுத்தும்.எண்ணெய் மற்றும் தூசுகள் படிவதால் தான் பெரும்பாலும் பருக்கள் உருவாகின்றன.பருக்களை விரட்ட தொடர்ந்து கடைபிடித்து வாருங்கள் பருக்கள் இல்லாத  இடமாக முகம் மாறிவிடும்.

அதேபோன்று உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்,மேலும் நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் கரைந்துவிடும்.அதேபோன்று வெந்நீரை தினமும் பருகும் போது உடலை சுத்தம் செய்வது மட்டுமன்றி வேகமாக வயதையும் குறைத்து இளமையை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

அடுத்து நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் அது பலவிதமான உடல் நலக் குறைவை ஏற்படுத்திவிடும்.ஆனால் இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.முக்கியமாக அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும் முடிகள் வளர வழிவகுக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி அதிகமாக இருக்கும் பொழுது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்று வலி குறைந்துவிடும். இது மட்டுமல்ல ஒற்றைத் தலைவலி,உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு திடீரென கூடுவது குறைவது, உடல் வலி, ஆஸ்துமா, நரம்பு பிடிப்பு, நோய்களில் கண் காது தொண்டை தொடர்பான பிரச்சினைகளை இவை அனைத்தும் நாளாக நாளாக கட்டுக்குள் வந்துவிடும்.

முக்கியமாக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்த பின், அடுத்த 40 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவை சாப்பிடக்கூடாது.காபியை எடுத்துக் கொள்ளக்கூடாது.இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க...நன்றி...

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...