Breaking News

coronavirus தமிழகத்தில் முதல் உயிரிழப்பு



coronavirus தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்த நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி அவர்களுக்கு மட்டுமே குருநாதர் உறுதியாகி வந்த நிலையில் வெளிநாடு சென்று இருக்காது மதுரையைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவருக்கு ஒருவர் உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உறுதிசெய்யப்பட்டது.


 அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அவரின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை உள்ளிட்டவை இருந்தது சிகிச்சையை சவால் ஆக்கியது.

 இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 உயிரிழந்த நபருக்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்தை சேர்ந்த இருவரிடமிருந்து  ஏற்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...