Breaking News

சுகாதாரத்துறையில் 2215 காலிப்பணியிடங்கள்...தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்...

                      தமிழகத்தில் CORONA வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.வைரஸ் தடுப்பு பணிக்காக ரயில்வே மருத்துவமனை சார்பில் தற்காலிகமாக மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறையில் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணிக்காக தற்காலிகமாக 2215 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலி இடங்கள் அனைத்தும் மாவட்ட வாரியாக நிறுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.பிளஸ் டூ தேர்வில் தாவரவியல் விலங்கியல் உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும்.

மேலும் அரசு அல்லது அரசு அங்கீகரித்த ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் ஓராண்டு சுகாதார பணியாளர் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணிக்கு மாதம் 20,000 சம்பளம் வழங்கப்படும்.

மூன்று மாத கால ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியை என்று பாராமல் அனுபவிக்கும்படி அறிவித்துக் கொள்கிறார்கள்.அடுத்தடுத்து வரக்கூடிய அரசு வேலைவாய்ப்புகளில் இந்த பணி அனுபவம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...