நொச்சி இலையின் மருத்துவ பயன்கள் (Nochi Leaf Uses)
நொச்சி இலையில் ஏராளமான நன்மைகளா!...
இந்த கொரோனா காலத்தில் ஆவி பிடிப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முக்கியமானது நொச்சியிலை ஆகும். இந்த நொச்சி இலையின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்!... வாருங்கள்!...
வளருமிடம் : (Nochi leaf growing place)
மலைப்பகுதிகளில் காணப்படும் மூலிகையில் மிக சிறப்பு வாய்ந்த மூலிகை நொச்சி ஆகும். இவை தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் களைச்செடிகளாக வளரும். புதர்ச் செடியாகும், மரமாகவும் நொச்சி வளரும். மலைகளில் 6 மீட்டர் உயரம் வரை வளரும். சமவெளிகளில் 4 மீட்டர் உயரம் வரை வளரும். ஆரம்பத்தில் நொச்சிச் செடியை ஈரப்பதம் காயாதவாறு வளர்த்தால்,எல்லா இடங்களிலும் எளிதாக வளரும்.
வகைகள் : (Nochi Varieties)
நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து நிலைகள் கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைப்படும்.
இவற்றுள் கருநிற நொச்சியில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்த நொச்சி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நொச்சியின் வேர், பட்டை, இலை, விதை, பூக்கள் என முழு தாவரமே மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. இந்த இலையின் சாறு, அஜீரணம், நரம்புவலி,மந்தமாக செயல்படும் ஈரல், உடல் பலவீனம் ஆகியவற்றை சரிப்படுத்த பயன்படுகின்றன.
ஆவி பிடித்தல் : (Breathing in the nochi leaf)
ஆவி பிடித்தல் சித்த மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் இன்றியமையாதது ஆகும். நன்கு கொதிக்க வைத்த நீரில் நொச்சி இலையை போட்டு ஆவி பிடித்தால் சுவாச பாதையை சீராக்கி கடுமையான நெஞ்சு சளி, இருமல் போன்றவற்றை குணமாக்கும். விரும்பினால் நொச்சி இலையுடன் கற்பூரவள்ளி, துளசி ஆகியவற்றை சேர்த்தும் ஆவி பிடிக்கலாம். மேலும் இது குளிர் காய்ச்சல், சளி, தலையில் நீர் கோர்த்தல், மண்டையில் நீர் கோர்த்தல்,உடலில் இருக்கும் நச்சு ஆகியவற்றை வெளியேற்ற ஆவி பிடித்தால் மிக முக்கியமானதாகும்.
பிற நன்மைகள் : (Nochi Leaf Uses)
உடல் வலி நீங்க : இரண்டு கைப்பிடி நொச்சி இலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பிறகு அந்நீரில் குளித்து வந்தால் உடல் வலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு ஆகியவை நீங்கும். இதனால் மூட்டு வலியும் சரியாகும்.
உடல் புத்துணர்வு பெற : நொச்சி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
வீக்கம், கட்டி நீங்க : உடலில் வீக்கம், கட்டி இருந்தால் நொச்சி இலையை வதக்கி வீக்கங்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் கட்ட அவை கரைந்துவிடும். ஏனென்றால் பாதிக்கப்பட்ட இடங்களில் நொச்சி இலை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. எனவே வலி, வீக்கத்தைக் குறைக்கும். இது அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.இது கிராமங்களில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
தலைவலி நீங்க : காய்ந்த நொச்சி இலையை புகைமூட்டி, அந்த புகையை சுவாசித்தால் தலைவலி நீங்கும்.ஆஸ்துமா,நுரையிரல் பிரச்சினை இருப்பவர்கள் இதற்கு பதிலாக நொச்சி இலையை கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைவலி குறையும்.
மூக்கடைப்பு நீங்க : வெள்ளை துணியில் நொச்சி இலையை கசக்கி போட்டு மூக்கில் முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சிறு குழந்தைகளும் இம்முறையைப் பயன்படுத்தலாம். இச்சாறை மூக்கின் மேல் பற்றுப் போலவும் போடலாம்.
ஆஸ்துமா நீங்க : நொச்சி இலையுடன் கிராம்பு,மிளகு,பூண்டு ஆகியவற்றை அரைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா நீங்கும்.
சைனஸ் நீங்க : துணியில் நொச்சி இலைகளை போட்டு தலையணையாக பயன்படுத்தினாலே சைனஸ் நீங்கிவிடும். தூக்கம் நன்றாக வரும்.
கழுத்து வலி நீங்க : நொச்சி இலைச் சாற்றுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, அதை வெதுவெதுப்பாக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தாலே கழுத்து வலி, கழுத்தில் நெறி கட்டுதல், நரம்பு பிரச்சனையால் ஏற்படும் கழுத்து வலி ஆகியவை நீங்கும். மேலும் இரவில் நொச்சி இலையை கழுத்தின் பின் வைத்து உறங்கினால் வலி குறையும்.
கொசுக்களை விரட்ட : நொச்சி இலையுடன் வேப்பிலை சேர்த்து, அவற்றை எரித்து புகையை ஏற்படுத்தும்போது, அந்த புகை மூட்டத்தினால் கொசுக்கள் ஓடிவிடும்.
தானியங்களை பாதுகாக்க : அரிசி, தானியம்,பருப்பு வகைகளை பாதுகாக்க அவற்றில் நொச்சி போட்டு வைப்பதனால் புழு, பூச்சி வராமல் தடுக்கும்.
மேலும் கண்நோய், கணைய நோய், காசநோய், தலைமுடிப் பிரச்சினை ஆகியவற்றை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இத்தனை நன்மைகள் வாய்ந்த நொச்சியை வளர்க்க வேண்டும் என்றால் அதன் தண்டு பகுதியை வெட்டி ஈரப்பகுதி இருக்கும் இடத்தில் வைத்தால் வளர்ந்துவிடும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...