Breaking News

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் / Appointment of Temporary Teachers in Government Schools

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் / Appointment of Temporary Teachers in Government Schools

To apply for the post of temporary teacher




  •  அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
  • தற்காலிக ஆசிரியர்கள் நியமன முறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்து உள்ள நிலையில் அந்த ஆணையின் படி தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • அதன்படி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு 2022-23 ஆம் ஆண்டில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான  பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு.அதன்படி இடைநிலை ஆசிரியர் பதவிக்கு  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் பெற்றிருக்க வேண்டும்.
  • இது வரையறுக்கப்பட்ட தகுதியாகும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • முதுகலை ஆசிரியர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை பரிசீலிக்க வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு வரையறுக்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்கள் ஆக பணிபுரிந்து வருபவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியில் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
  • முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் முதுகலை ஆசிரியர்கள் தெரிவு காண ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மாவட்ட எல்லைக்குள் வகிப்பவர்கள் அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் 4-ம்தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...