Breaking News

இனி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ! தமிழக அரசு வெளியீடு ! / Breakfast for 1st to 5th grade students in schools! Tamil Nadu government release! /

  இனி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி ! தமிழக அரசு வெளியீடு ! / Breakfast for 1st to 5th grade students in schools! Tamil Nadu government release! /
 Breakfast for 1st to 5th grade students in schools! Tamil Nadu government release! /

மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.


 அரசுப் பள்ளிகளில் நான்கில் ஒரு மாணவர் வளர்ச்சிக் குறைபாடு கொண்டவராகவும், 2ல் ஒரு மாணவர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவராக இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.


 இதனால் மாணவர்களின் உடல்நலத்தையும், கல்வி திறனையும் ஒருங்கே மேம்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்பதை கல்வியாளர்கள் அரசுக்கு அறிவுறுத்தினர்.


 இதனால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் எண்ணறிவு, எழுத்தறிவு பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை தடுக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது.


15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 

அதேபோல் காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும். 

காலை உணவு திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...